இந்திய விமானப்படை 86-வது ஆண்டு தினம்: பிரதமர் மோடி, ஜனாதிபதி வாழ்த்து

இந்திய விமானப்படை 86-வது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி, ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய விமானப்படை 86-வது ஆண்டு தினம்: பிரதமர் மோடி, ஜனாதிபதி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது. விமானப்படையின் 86-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் விமானப்படை தலைமை தளபதி பிஎஸ் தனோவா பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. வீரர்கள் சாகச நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தேசியக் கொடியின் மூவர்ணங்களைக் கொண்ட பாராசூட்டுகளில் பறந்தபடி வீரர்கள் வானில் சாகசம் செய்து அசத்தினர்.

விமானப்படையின் தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில்,

விமானப் படை குறித்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி டுவிட்டரில், இந்த நாளில் விமானப் படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பெருமையுடன் கவுரவிக்க வேண்டும். துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வீரர்களை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

உலக அளவில் 4வது இடத்தில் இந்திய விமானப்படை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com