நேபாள அதிபர் மற்றும் பிரதமருடன் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் சந்திப்பு

நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பேசினார். #Tamilnews
நேபாள அதிபர் மற்றும் பிரதமருடன் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் சந்திப்பு
Published on

காத்மாண்டு,

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், இன்று அந்நாட்டு ஜனாதிபதி பித்ய தேவி பண்டாரி மற்றும் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா அகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, நேபாளம்- இந்தியா இடையேயான இரு தரப்பு உறவுகளை ஊக்கப்படுத்துவது ராணுவ உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக நேற்று, ராணுவ தளபதி பிபின் ராவத் நேபாள ராணுவ தளபதி ராஜேந்திர சேத்ரியை சந்தித்து உரையாடினார். நேற்று கொண்டாடப்பட்ட நேபாள ராணுவ தினத்தில் சிறப்பு விருந்தினராகவும் பிபின் ராவத் கலந்து கொண்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com