அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு தொழில்நுட்ப சோதனை: இந்திய ராணுவம் நடத்துகிறது


அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு தொழில்நுட்ப சோதனை: இந்திய ராணுவம் நடத்துகிறது
x

அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு தொழில்நுட்ப சோதனையை இந்திய ராணுவம் நடத்த உள்ளது.

புதுடெல்லி,

இந்திய ராணுவம் தற்போது நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் விரிவான திறன் மேம்பாட்டு செயல் விளக்கங்களை மேற்கொண்டு வருகிறது. அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுகிறது. பொக்ரான், பாபினா மற்றும் ஜோஷிமத் துப்பாக்கிச் சூடு களங்களிலும் இது நடக்கிறது.

ஆக்ரா மற்றும் கோபால்பூரில் வான் பாதுகாப்பு உபகரண செயல் விளக்கங்களுக்கும் திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த கள சோதனைகள் போர் நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகின்றன. அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை கடுமையாக மதிப்பிடுவதற்கு மின்னணு போர் உருவகப்படுத்துதல்களை ஒருங்கிணைக்கின்றன. இதனை ராணுவத்தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, ஏற்கனவே மதிப்பாய்வு செய்திருந்தார்.

இந்த சோதனைகள் இந்திய ராணுவத்தின் 'மாற்றத்தின் தசாப்தம்' என்ற திட்டத்துக்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கின்றன என்றும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை விரைவாக உள்வாங்குவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story