இந்தியாவுக்குள் அத்துமீறி பறந்த பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தியது எல்லை பாதுகாப்பு படை

பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே இந்தியப் பகுதிக்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் டிரோனை BSF வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இந்தியாவுக்குள் அத்துமீறி பறந்த பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தியது எல்லை பாதுகாப்பு படை
Published on

அமிர்தசரஸ்,

பாகிஸ்தான் -இந்தியா இடையே எல்லையில் நீண்ட நாட்களாக  பதற்றம் நிலவி வருகிறது.பாகிஸ்தான் இராணுவம் சில நேரங்களில் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் அமிர்தசரஸ் மாவட்டத்தின் தனோய் குர்த் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.50 மணியளவில் வானில் வினோத சத்தம் கேட்டது.  இதையடுத்து  பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்)  வீரர்கள், கவனித்த போது ஆளில்லா ட்ரோன் ஒன்று பறந்து கொண்டிருப்பதை கண்டனர். உடனடியாக அந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்  துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இந்த தகவலை பிஎஸ்எஃப் அதிகாரி தெரிவித்தார். சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா ட்ரோன் விமானம் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. சுட்டு வீழ்த்தப்பட்ட கறுப்பு நிற  டிரோன் நீண்ட  தேடுதலுக்குப் பிறகு ஒரு வயலில் இருந்து ஒரு பையுடன் 2.70 கிலோகிராம் போதைப்பொருளுடன் மீட்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com