

காத்மாண்டு
இவ்வாறு சாதனை புரிந்த முதல் அணி இதுவே என்று கூறப்படுகிறது. கர்னல் விஷால் துபே என்பவரின் அணியைச் சேர்ந்தவர்களாவர் இவர்கள். நாங்கள் 10 பேர் கொண்ட அணியை அமைத்து இச்சாதனையை செய்ய முடிவெடுத்தோம். இறுதியில் நான்கு பேர் இச்சாதனையை செய்துள்ளனர் என்றார் விஷால் துபே.
பிராணவாயு உருளையின்றி நாங்கள் எவெரெஸ்ட் ஏறி சாதனை செய்திருப்பது வரலாற்றை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இதுவரை 4,000 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறியுள்ளனர். இதில் 187 பேர் மட்டுமே பிராணவாயு உருளையின்றி ஏறியுள்ளனர். எவெரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர்களாகும். இக்குழுவினரோட மலையேறிய ஆறு ஷெர்பா வழிகாட்டிகளும் (பிராணவாயு உருளையுடன்) இவர்களுடன் எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர். கடந்த மே மாதம் 21 ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இக்குழு காத்மாண்டுவை வெள்ளியன்று வந்தடைந்தது.