ராணுவ போலீசில் முதல் கட்டமாக 800 பெண்களை சேர்க்க முடிவு

ராணுவ போலீசில் பெண்களை சேர்ப்பதற்கான திட்டத்தில் இராணுவம் இறுதி முடிவு செய்துள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்
ராணுவ போலீசில் முதல் கட்டமாக 800 பெண்களை சேர்க்க முடிவு
Published on

புதுடடெல்லி:


ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் அஷ்வானி குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு வருடமும் ராணுவ போலீசில் பெண்களை சேர்க்க திட்டம் மிடப்பட்டு உள்ளது. ராணுவ போலீசில் முதல் கட்டமாக 800 பெண்களை சேர்க்க முடிவு செய்யபட்டு உள்ளது. இது பாலின தடைகளை உடைப்பதில் ஒரு பெரிய படியாக கருதப்படும் திட்டம் ஆகும்.

பாலியல் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு இராணுவப் போலீஸ் பிரிவில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான முடிவு செய்யபட்டு உள்ளதாக லெப்டினென்ட் ஜெனரல் குமார் தெரிவித்தார்.

தற்போது, ராணூவத்தில் பெண்கள் மருத்துவம் சட்டம், கல்வி, சிக்னல்கள் மற்றும் இயந்திரம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com