இந்திய கடலோர காவல் படை கப்பல்களும், விமானங்களும் 100% இந்தியாவை சேர்ந்தவை; வி.எஸ். பதானியா பேட்டி

நம்முடைய கடலோர காவல் படையின் அனைத்து கப்பல்களும் மற்றும் விமானங்களும் 100% இந்திய உற்பத்தியை சேர்ந்தவை என அதன் இயக்குனர் ஜெனரல் வி.எஸ். பதானியா பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய கடலோர காவல் படை கப்பல்களும், விமானங்களும் 100% இந்தியாவை சேர்ந்தவை; வி.எஸ். பதானியா பேட்டி
Published on

புதுடெல்லி,

இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் ஜெனரல் வி.எஸ். பதானியா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நம்முடைய கடலோர காவல் படையின் அனைத்து கப்பல்களும் மற்றும் விமானங்களும் 100% இந்தியாவை சேர்ந்தவை.

வருகிற ஆண்டுகளில், கடலோர காவல் பிரிவுகளில் ஒருங்கிணைக்கப்பட கூடியவற்றில், இறக்குமதி பொருட்கள் எதுவும் இருக்காது. ஆத்மநிர்பார் பாரத் இயக்கத்தினை கடலோர காவல் படை முன்னெடுத்து செல்லும் என அவர் கூறியுள்ளார்.

இந்திய கடற்படையின் துணை தளபதி சதீஷ் என் கோர்மாடே செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று கூறும்போது, வளர்ச்சி, ஆத்மநிர்பார்பாரத் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இந்தியா விளங்குகிறது.

வான், நீருக்கு அடியில், தரையின் மேற்பரப்பில் என அனைத்து போர் நிலைகளிலும், போரிடும் முறையில் பெரிய அளவில் நாம் வளர்ந்து இருக்கிறோம். நடுத்தர மற்றும் குறுகிய தொலைவுக்கான ஏவுகணை செலுத்துவது, நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை செலுத்துவது, வானில் இருந்து கப்பலுக்கான ஏவுகணை என கடற்படையில் நாம் வளர்ச்சி கண்டு வருகிறோம்.

வருங்கால போர்களை நமது சொந்த தொழிற்சாலைகளில் உருவான நமது சொந்த ஆயுதங்களை கொண்டு போரிட முடியும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். பிரதமரின் இந்த தொலைநோக்கு பார்வை சாதனை படைக்கும். இந்த வளர்ச்சியை 2 முதல் 3 ஆண்டுகளில் அடைந்துள்ளோம் என அவர் பெருமையுடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com