

புதுடெல்லி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 24 மாநிலங்களில் 53 இடங்களில் போட்டியிட இடங்களை தேர்வு செய்துள்ளது. இதில் 15 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளராக பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருடைய பெயர் முதல் பட்டியலில் இடம்பெறவில்லை.
இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா கூறுகையில், பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியுடன், கண்ணையா குமார் போட்டியிட விருப்பம் தெரிவித்த தொகுதி குறித்து பேசி வருகிறோம். அக்கட்சி எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் அதன் பிறகு நாங்கள் அடுத்தகட்ட முடிவை எடுப்போம் என்றார். எனினும் கண்ணையா குமாருக்கு அந்த தொகுதியை விட்டுத்தர ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிக்கு விருப்பம் இல்லை. இதனால் அவருக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.