சிந்தி மொழியில் இந்திய அரசியலமைப்பு: சி. பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்

இந்திய அரசியலமைப்பை சிந்தி மொழியில் தேவநாகரி மற்றும் பாரசீக ஆகிய இரு எழுத்துகளிலும் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
சிந்தி மொழியில் இந்திய அரசியலமைப்பு: சி. பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்
Published on

புது டெல்லி,

இன்று துணை ஜனாதிபதி மாளிகை இந்திய அரசியலமைப்பின் சிந்தி மொழி பதிப்பின் தேவநாகரி மற்றும் பாரசீக ஆகிய இரு எழுத்துகளிலும் துணை குடியரசு தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

சிந்தி மொழி தினம் கொண்டாடப்படும் இத்தருணத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி தெரிவித்த துணை ஜனாதிபதி, சிந்தி சமூகத்தின் வரலாற்று பயணத்தை பற்றி உரையாற்றினார்.

உங்கள் தாய்மொழியை கொண்டாடுங்கள் என்றும், மிக முக்கியமாக, நமது பாரதத்தை பன்முகத்தன்மை வாய்ந்ததாகவும் ஒற்றுமை, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கிய அடித்தளமாக இருக்கும் மொழிகளின் அழகிய சிம்பொனியையும் கொண்டாடுங்கள் என்றும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என துணை ஜனாதிபதி கூறினார்.

குடிமக்கள் அரசியலமைப்பை தங்கள் தாய்மொழியில் வாசித்து புரிந்துகொள்ளும்போது, ஆட்சிக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி குறைகிறது. மேலும் நாட்டின் பிரிவினைக்கு பிந்தைய காலகட்டத்தில், எண்ணற்ற சிந்தி மொழி பேசும் குடும்பங்கள் தங்கள் தாய்மண்ணிலிருந்து இடம்பெயர நேர்ந்தது.

அத்தகைய சவாலான காலங்களில், சிந்தி மொழியானது மீள்திறன் மற்றும் ஒற்றுமையின் வலிமைமிக்க அடையாளமாக திகழ்ந்தது. சிந்தி தினத்தை முன்னிட்டு சிந்தி பேசும் சமூகத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டம் மற்றும் நீதி, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ராஜஸ்தான் சட்டமன்ற பேரவை தலைவர் வாசுதேவ் தேவ்நானி, மக்களவை உறுப்பினர் சங்கர் லால்வானி மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com