இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்கூறினார்.
இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்
Published on

மும்பை:

மூத்த அதிகாரியான என் கே சிங்கின் சுயசரிதை போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் பவர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரிசரவ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் கூறியதாவது:-

இந்தியப் பொருளாதாரம் மறுமலர்ச்சியின் வாசலில் உள்ளது, அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் இடமளிக்கும் நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றன.

இன்று, இந்தியாவில் நாம் தொற்றுநோயின் தாக்கத்திற்குப் பிறகு மறுமலர்ச்சி செயல்முறையின் வாசலில் இருக்கிறோம். பல நிதி நிறுவனங்கள் ஏற்கனவே மூலதனத்தை திரட்டியுள்ளன, மற்றவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நாணய மற்றும் நிதிக் கொள்கைகள் காரணமாக, இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளதாக கூறினார். மேலும், நிதி நிறுவனங்களுக்கு போதுமான மூலதனம் இருப்பது மிகவும் முக்கியமானது என கூறினார்.

ஒரு இடவசதி நிலைப்பாடு என்பது வளர்ச்சியை ஆதரிக்க தேவையான அனைத்து நிதிகளையும் வழங்க தயாராக இருப்பது. நான்காவது காலாண்டில் பொருளாதாரம் சுருங்கிவிடும் என்று அவர் கணித்த பதினைந்து நாட்களுக்குப் பிறகு அவரது அறிக்கை வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com