இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது: ரிசர்வ் வங்கி தகவல்


இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது: ரிசர்வ் வங்கி தகவல்
x
தினத்தந்தி 24 July 2025 7:02 AM IST (Updated: 24 July 2025 1:12 PM IST)
t-max-icont-min-icon

இந்திய பொருளாதாரம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

உலகநாடுகளிடையே நிலவி வரும் மோதல், அமெரிக்காவின் வரிவிதிப்பு குழப்பம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நடுவே இந்திய பொருளாதாரம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய பொருளாதாரம் கடந்த ஜூன்-ஜூலை காலத்தில் சீராக உள்ளது.

உலக நாடுகளிடையே ஏற்பட்ட மோதல், அமெரிக்காவின் வரிவிதிப்பு இழுபறி உள்ளிட்ட காரணங்களை காட்டிலும் இந்திய பொருளாதாரம் சீரான நிலையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 4 மாதங்களில் இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதத்திற்குள்ளாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்திய பொருளாதாரம், உள்நாட்டு வாணிபத்தால் இயங்குகிறது" என கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story