இந்திய பொருளாதாரம் உயரும்: உலக வங்கி கணிப்பு

இந்திய பொருளாதாரம் உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் உயரும்: உலக வங்கி கணிப்பு
Published on

புதுடெல்லி,

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாக கொண்டு உலக வங்கி இயங்கி வருகிறது. இது உலகநாடுகளில் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சர்வதேச நிறுவனமாக உள்ளது. இந்தநிலையில் இந்த நிதியாண்டில் (2025-26) இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்திருந்தது.

அமெரிக்க வர்த்தக வரிவிதிப்பு, உலகநாடுகள் இடையேயான போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்தநிலையில் உலக வங்கி தனது நிலைப்பாட்டை மாற்றி வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என உயர்த்தி கணித்துள்ளது. உள்நாட்டு தேவை வளர்ச்சி, விவசாய உற்பத்தி, வலுவான நுகர்வோர் வளர்ச்சி, மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலத்தீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com