ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய நிபுணர் குழு பரிந்துரை

இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசியை பரிந்துரை செய்துள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய நிபுணர் குழு பரிந்துரை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இவற்றில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு உள்நாட்டு உற்பத்தி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியிருந்தது.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முதல் டோஸ், 2வது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின், மருந்து ஆலோசனைக்கான நிபுணர் குழு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com