அமெரிக்காவில் வீடு வாங்கிய முகேஷ் அம்பானி..விலை மட்டும் எத்தனை கோடி தெரியுமா?


அமெரிக்காவில் வீடு வாங்கிய முகேஷ் அம்பானி..விலை மட்டும் எத்தனை கோடி தெரியுமா?
x
தினத்தந்தி 15 Sept 2025 3:45 PM IST (Updated: 15 Sept 2025 5:08 PM IST)
t-max-icont-min-icon

இந்த வீட்டில் கூடைப்பந்து மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

மும்பை,

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதி உள்ளது. இது பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி ஆகும். அங்குள்ள ஹூபர்ட் சாலையில் இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ரூ.153.59 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்காவின் யுபிக் விட்டி நிறுவனத்தின் தலைவர் ராபர்ட்பெரா கடந்த 2018-ம் ஆண்டில் ட்ரிபெகாவில் உள்ள வீட்டை வாங்கினார். தற்போது அவரிடம் இருந்து முகேஷ் அம்பானி வீட்டை வாங்கி உள்ளார்.

இது 17 ஆயிரம் சதுர அடி கொண்ட சொகுசு வீடு ஆகும். இந்த வீட்டில் கூடைப்பந்து மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக ஒரு ஓட்டல் உள்ளது. மாண்டரின் ஒரியன்டல் என்ற பெயருடைய அந்த ஓட்டலை கடந்த 2022-ம் ஆண்டில் ரூ.866 கோடிக்கு முகேஷ் அம்பானி வாங்கினார்.

மேலும் அவருக்கு சொந்தமாக நியூயார்க் நகரில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டை கடந்த 2023-ம் ஆண்டில் அவர் விற்பனை செய்து விட்டார்.

1 More update

Next Story