தென் சீனக் கடலில் இந்திய கடற்படை நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கை


தென் சீனக் கடலில் இந்திய கடற்படை நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கை
x

இந்திய பெருங்கடலுக்கு வெளியே முதல் முறையாக நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கைகளை ஐ.என்.எஸ். நிஸ்டார் மேற்கொண்டது.

புதுடெல்லி,

இந்திய கடற்படையின் கிழக்கு நீர்மூழ்கி மீட்புப் பிரிவை சேர்ந்த வீரர்கள், சிங்கப்பூர் குடியரசு கடற்படை நடத்திய XPR-25 பயிற்சியில் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். நிஸ்டார் கப்பலில் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த பயிற்சியின்போது, இந்திய பெருங்கடலுக்கு வெளியே முதல் முறையாக நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கைகளை ஐ.என்.எஸ். நிஸ்டார் மேற்கொண்டது. இந்த பயிற்சி இந்திய கடற்படையின் நீர்மூழ்கி மீட்புத் திறனையும், தொழில்முறைத்தன்மையையும் வெளிப்படுத்தி, சர்வதேச அளவில் இந்திய கடற்படையின் வெற்றிக்கரமான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story