‘இந்தியப் பெருங்கடல் உலக வர்த்தகத்திற்கு மையமாக திகழ்கிறது’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்தியப் பெருங்கடல் என்பது அளவற்ற வாய்ப்புகள் மற்றும் சவால்களைக் கொண்ட ஒரு பிராந்தியம் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
‘இந்தியப் பெருங்கடல் உலக வர்த்தகத்திற்கு மையமாக திகழ்கிறது’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
Published on: 

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கம்( Indian Ocean Rim Association - IORA) மந்திரிகள் மாநாடு இன்று நடைபெற்றது. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, கென்யா, தான்சானியா, மொசாம்பிக், சோமாலியா, ஓமன், ஏமன், பங்களாதேஷ், மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 23 நாடுகளை உள்ளடக்கிய IORA-வின் தற்போதைய தலைவர் என்ற முறையில், இந்தியா இந்த மாநாட்டை நடத்தியது.

மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்த சங்கத்தில் உள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், மந்திரிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், “புவிசார் அரசியல் மாற்றங்கள் நிகழும் இக்காலகட்டத்தில், இந்த அமைப்பு தனது கூட்டுக்குரலை மேம்படுத்தி, ஒரு பிராந்திய தளமாக தனது பங்கை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

வாய்ப்புகள் மற்றும் சவால்கள்

மேலும், “இந்தியப் பெருங்கடல் உலக வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு, இணைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு மையமாக திகழ்கிறது. மேலும், இது பன்முகத்தன்மை, அளவற்ற வாய்ப்புகள் மற்றும் சவால்களைக் கொண்ட ஒரு பிராந்தியமாகும்” என்று அவர் கூறினார்.

“IORA சங்கம் பல்வேறு சர்வதேச சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், “குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மாற்றங்கள் நிகழும் இக்காலகட்டத்தில், IORA தனது கூட்டுக்குரலை மேம்படுத்தி, ஒரு பிராந்திய தளமாக தனது பங்கை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அதோடு, “இந்த சங்கத்தின் உறுப்பு நாடுகளிடையே ஒருங்கிணைப்பு, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயல்பாடு ஆகியவை தேவைப்படுகின்றன" என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

X