கூகுள் பிளே ஸ்டோரில் சாட்ஜிபிடியை முந்திய இந்தியன் ஆயில் நிறுவனம்

கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இந்தியன் ஆயில் ஒன் செயலி முதலிடம் பெற்றுள்ளது.

image courtesy : AI
image courtesy : AI
Published on

ஈரான் - அமெரிக்கா போரால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் அந்த வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு பெரிதும் இறக்குமதியை நம்பியுள்ளது. இதனால், ஈரான் - அமெரிக்கா போரால் இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுவதால் ஹோட்டல்கள் பலவும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைத்தாலும் மக்கள் அச்சத்தில் அதிக அளவில் புக்கிங் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

செல்போன் எண் மூலமாக புக் செய்ய முடியவில்லை எனக் கூறி ஆயில் நிறுவனங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து புக்கிங் செய்யத் தொடங்கினர். இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்தியன் ஆயில் ஒன் செயலி முதலிடம் பெற்றுள்ளது. பிரபல ஏஐ செயலியான சாட்ஜிபிடி இந்த பட்டியலில் நீண்ட காலமாக முதலிடம் பெற்ற நிலையில், இந்தியன் ஆயில் செயலி சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com