2030க்குள் 50 ராக்கெட்டுகளை அனுப்ப திட்டம்: ஸ்பேஸ் ரூட்

தனியார் ராக்கெட் திட்டமிட்ட புவிட்டப்பாதைக்கு அனுப்பி அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
2030க்குள் 50 ராக்கெட்டுகளை அனுப்ப திட்டம்: ஸ்பேஸ் ரூட்
Published on

ஸ்ரீஹரிகோட்டா,

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்த முதல் தனியார் ராக்கெட் `விக்ரம் - 1' வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

விக்ரம்-1

தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்தது இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட் டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று மதியம் 12.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 11.30 மணிக்கு ஏவப்படுவதாக அறிக்கப்பட்டிருந்த ராக்கெட் தொழில்நுட்பக்கோளாறால் சரியான நேரத்திற்கு ஏவப்படவில்லை.

கால தாமதம்

5 நிமிடங்கள் முன்பாக ராக்கெட்டில் இருந்த கோளாறு கண்டறியப்பட்டு,தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி தொழில்நுட்பை சரி செய்தனர். அதனை தொடர்ந்து 12.05 மணிக்கு விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.

ஒரு முக்கிய மைல்கல்

இந்தநிலையில், ஸ்கை ரூட் நிறுவனர் பரத் பேசியதாவது:-

இந்தியாவின் முதல் தனியார் துறை ஏவுதல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்பதை முறைப்படி அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

சென்னை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட விக்ரம்-1 ராக்கெட் அதன் புவிட்ட பாதையை வெற்றிகரமாக எட்டி உள்ளது. இந்த நிகழ்வு தனியார் விண்வெளி துறைக்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய கல். முதல் முயற்சியிலேயே புவி சுற்றுப்பாதைக்கு செல்வது, வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல.

இந்தியாவில் பல எலான் மஸ்குகள் உருவாக வாய்ப்பு

ராக்கெட் 100 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட, உள்நாட்டு தொழில்நுட்பத்தில், இந்தியர்களால் வடிவமைக்கப்பட்டது. 2030க்குள் எங்கள் நிறுவனம் மூலம் 50 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மேலும் பல எலான் மஸ்குகள் உருவாக வாய்ப்பு. தனியார் ராக்கெட் திட்டமிட்ட புவிட்டப்பாதைக்கு அனுப்பி அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா சாதனை படைத்துள்ளது என்றார்.

முன்னதாக விக்ரம் 1 திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து விஞ்ஞானிகள் கைத்தட்டி பரஸ்பரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தனியார் ராக்கெட் நிறுவனக் குழுவினருக்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com