பராமரிப்பு சிக்கல், சாதகமற்ற வானிலை காரணமாக 220 ரெயில்களை ரத்து செய்த இந்திய ரெயில்வே நிர்வாகம்

சுமார் 152 ரெயில்கள் முழுமையாகவும், 67 ரெயில்களில் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டன.
பராமரிப்பு சிக்கல், சாதகமற்ற வானிலை காரணமாக 220 ரெயில்களை ரத்து செய்த இந்திய ரெயில்வே நிர்வாகம்
Published on

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே நிர்வாகம் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 22 ரெயில்களை ரத்து செய்துள்ளது. பராமரிப்பு சிக்கல்கள் காரணமாகவும், பல இடங்களில் சாதகமற்ற வானிலை நிலவுவதாலும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட மொத்த ரெயில்களில் சுமார் 152 ரெயில்கள் முழுமையாகவும், 67 ரெயில்களில் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டன. மேலும் 8 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர சுமார் 30 ரெயில்கள் இன்று இந்திய ரெயில்வே நிர்வாகத்தால் திருப்பி விடப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com