விவசாயிகள் போராட்டம்: பஞ்சாபில் 68 ரயில்கள் ரத்து

பஞ்சாபின் பல பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாபில் டிசம்பர் 20 அன்று தொடங்கிய விவசாயிகள் போராட்டம், தற்போது மாநிலம் முழுவதும் ஏழு பிரிவாக பரவியுள்ளது. விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாபின் பல பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், பஞ்சாப் மற்றும் ஜம்முவை இணைக்கும் 68-க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்ய அல்லது திருப்பி விட இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவிக்கு செல்லும் மூன்று சிறப்பு ரயில்களும் அடங்கும்.

பல ரயில்கள் குறுகிய தூரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 16 ரயில்கள் பிற ரயில் நிலையங்களிலிருந்து புறப்படுகின்றன. மேலும் 13 ரயில்கள் செல்லும் இடத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com