இந்திய ரெயில்வேயின் முதல் பெண் என்ஜின் டிரைவர் பணி ஓய்வு


இந்திய ரெயில்வேயின் முதல் பெண் என்ஜின் டிரைவர் பணி ஓய்வு
x

2023-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி சோலாப்பூர்- மும்பை சி.எஸ்.எம்.டி. இடையேயான முதல் வந்தே பாரத் ரெயிலை இயக்கும் கவுரவமும் அவருக்கு கிடைத்தது.

மும்பை,

இந்திய ரெயில்வேயில் முதல் பெண் என்ஜின் டிரைவராக பணிக்கு சேர்ந்தவர் சுரேகா யாதவ். சத்தாராவை சேர்ந்த இவர், எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்து 1989-ம் ஆண்டு உதவி என்ஜின் டிரைவராக பணியில் சேர்ந்தார்.

ஆசிய அளவிலும் முதல் பெண் என்ஜின் டிரைவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. 1996-ல் சரக்கு ரெயில் என்ஜின் டிரைவராக பதவி உதவி பெற்றார். அதன்பிறகு அவர் மலைப்பகுதிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவதிலும் கைதேர்ந்தவர் ஆனார். 2023-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி சோலாப்பூர்- மும்பை சி.எஸ்.எம்.டி. இடையேயான முதல் வந்தே பாரத் ரெயிலை இயக்கும் கவுரவமும் அவருக்கு கிடைத்தது. இந்தநிலையில் தனது 36 ஆண்டு சேவையை நிறைவு செய்து அவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் பிரியாவிடை அளித்தனர்.

1 More update

Next Story