டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா அதிகரிப்பு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 9 பைசா அதிகரித்துள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா அதிகரிப்பு
Published on

மும்பை,

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ந்தேதி 30 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.09 ஆக இருந்தது.

இது நேற்று மீண்டும் 58 காசுகள் வீழ்ச்சியடைந்தது. அதன்படி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.67 ஆக சரிந்து உள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி ஆகும்.

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 4 நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.58 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com