கனடாவில் உயிரிழந்த இந்திய மாணவி: மத்திய அரசுக்கு பெற்றோர் விடுத்த கோரிக்கை

பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
கனடாவில் உயிரிழந்த இந்திய மாணவி: மத்திய அரசுக்கு பெற்றோர் விடுத்த கோரிக்கை
Published on

 ஒண்டாரியோ,

இந்தியாவை சேர்ந்தவர் ஹர்சிம்த்ரந்தவா (வயது 21). இவர் கனடாவின் ஒண்டாரியா மாகாணம் ஹமில்டனில் உள்ள மொஹாக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், ஹர்சிம்ரத் ரந்தாவா, ஹாமில்டனில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஒரு காரில் இருந்த நபர் துப்பாக்கியால் மற்றொரு காரில் இருந்தவர்களை நோக்கி சுட்டார். இதில் ஒரு குண்டு மாணவி ஹர்சிம்ரத் மீது பாய்ந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து டொரோண்டோவில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைத்தளத்தில் கூறும் போது, ஹாமில்டனில் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவின் துயர மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளோம். அவரது குடும்பத்தினருடன் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளோம். அவரது குடும்பத்தினருடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்.

மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்.இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரம் அடைந்த குடும்பத்தினருடன் உள்ளன என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே, உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு கொண்டு வர  உதவுமாறு மத்திய அரசுக்கு  பஞ்சாப்பை சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com