இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

சர்வதேச விமான போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
Published on

துபாய்,

ஈரான் மற்றும் இந்தியா இடையே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்திய குடிமக்கள் யாரும் ஈரான் நாட்டுக்கு வான் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ பயணம் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, சர்வதேச விமான போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. நிச்சயமற்ற சூழலே நிலவி வருகிறது. எனவே, இந்தியர்கள் யாரும் தற்போது ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com