இந்தியா-பாகிஸ்தான் வர்த்தக தடையால் 2500 பேர் வேலையிழப்பு

காஷ்மீர் பிரச்சினையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் வர்த்தக தடையால், வாகா மற்றும் அத்தாரி எல்லையில் பணிபுரியும் 2,500 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் வர்த்தக தடையால் 2500 பேர் வேலையிழப்பு
Published on

லாகூர்,

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தக தடையால், பாகிஸ்தானில் சுமார் 1,000 தொழிலாளர்களும் மற்றும் இந்தியாவில் 1,500 தொழிலாளர்களும் வேலையில்லாமல் உள்ளனர். இவர்கள் வாகா மற்றும் அத்தாரி எல்லையின் கிராமப்புறங்களை சேர்ந்த தினசரி கூலி தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"லாரிகளில் சரக்குகளை ஏற்றுவது / இறக்குவதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ .1,000 முதல் ரூ.1,500 வரை சம்பாதித்த நாங்கள், கடந்த ஒரு வாரமாக எதையும் சம்பாதிக்கவில்லை. எங்களது சேமிப்புகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன" என்று அங்கு பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நிறுத்தி வைத்ததை தொடர்ந்து வாகா ரெயில் நிலையத்தில் உள்ள கூலி தொழிலாளர்களும் வேலையில்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com