இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49.30 லட்சமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49.30 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49.30 லட்சமாக உயர்வு
Published on

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 1,054- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49 லட்சத்து 30 ஆயிரத்து 237- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 90 ஆயிரத்து 061-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்து 776- பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com