இந்தியாவின் கொரோனா பாதிப்பு மீட்பு வீதம் 78.53% ஆக அதிகரிப்பு

இந்தியாவின் கொரோனா பாதிப்பு மீட்பு வீகிதம் 78.53% ஆக அதிகரித்து உள்ளது என மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் கொரோனா பாதிப்பு மீட்பு வீதம் 78.53% ஆக அதிகரிப்பு
Published on

புதுடெல்லி

நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை இப்போது 51,18,254 ஆக உள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்புகளில் 40,25,079 பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளனர், இந்தியாவில் கொரோனாவுக்கு 10,09,976 பேர் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

மராட்டிய மாநிலம் பாதிப்பில், முதல் இடத்தில் உள்ளது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,21,221 ஆகவும் மற்றும் 30,883 இறப்புகளாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா 5,92,760 உறுதிப்படுத்தப்பட்ட பாட்திப்புமற்றும் 5,105 இறப்புகளுடன் நாட்டில் இரண்டாவது மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக உள்ளது. 5,19,860 கொரோனா பாதிப்புகள் மற்றும் 8,559 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது, கர்நாடகா (4,84,990 லட்சம் பாதிப்புகள், 7,536 இறப்புகள்) மற்றும் டெல்லி (2,30,269 பாதிப்புகள் மற்றும் 4,839 இறப்புகள்) உள்ளன.

செப்டம்பர் 16ந்தேதி வரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 6,05,65,728 ஆகும், இதில் நேற்று சோதனை செய்யப்பட்ட 11,36,613 மாதிரிகள் அடங்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கொரோனா பாதிப்பு மீட்பு வீதம் 78.53% ஆக மேம்பட்டு உள்ளது. புதன்கிழமை 82,961 கொரோனா பாதிப்பு மீட்டெடுப்புகள் பதிவாகியுள்ளன, அவற்றில் கிட்டத்தட்ட கால் பகுதி மராட்டிய மாநிலத்தில் இருந்து மட்டுமே, ஒட்டுமொத்த மீட்பு 39.5 லட்சத்திற்கும், மீட்பு விகிதம் 78.53 சதவீதத்திற்கும் தள்ளியுள்ளது என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மீட்டெடுப்புகளில் கிட்டத்தட்ட 59 சதவீதம் ஐந்து மாநிலங்களிலிருந்து பதிவாகி உள்ளது - மடாட்டியத்தில் இலருந்து 23.41 சதவீதம் (19, 423 ); மற்றும் ஆந்திரா (9,628 ), கர்நாடகா (7,406), உத்தரப்பிரதேசம் (6,680) மற்றும் தமிழ்நாடு (5,735) ஆகியவற்றிலிருந்து 35.5 சதவீதம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com