

புதுடெல்லி,
ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, அரியானா, ஒடிசா, உத்தரபிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மேகாலயா, சண்டிகார், காஷ்மீர், அந்தமான் நிகோபார், அசாம், புதுச்சேரி, பஞ்சாப், இமாசலபிரதேசம், லடாக், மணிப்பூர் என 26 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒமைக்ரான் தனது காலடி தடத்தை பதித்து, 2,630 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள், ஒமைக்ரானின் மோசமான பாதிப்புக்குள்ளான முதல் 5 மாநிலங்கள் ஆகும்.
இந்நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி மராட்டியத்தில் 876 பேருக்கும்,
டெல்லியில் 465 பேருக்கும்,
கர்நாடகத்தில் 333 பேருக்கும்,
ராஜஸ்தானில் 291 பேருக்கும்,
கேரளாவில் 284பேருக்கும்,
குஜராத்தில் 204 பேருக்கும்,
தமிழ்நாட்டில் 121 பேருக்கும்,
அரியானாவில் 114 பேருக்கும்,
தெலுங்கானாவில் 107 பேருக்கும்,
ஒடிசாவில் 60 பேருக்கும்,
உத்தரபிரதேசத்தில் 31 பேருக்கும்,
ஆந்திராவில் 28 பேருக்கும்,
மேற்கு வங்காளத்தில் 27 பேருக்கும்,
கோவாவில் 19 பேருக்கும்,
அசாமில் 9 பேருக்கும்,
மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும்,
உத்தரகாண்டில் 8 பேருக்கும்,
மேகாலயாவில் 4 பேருக்கும்,
சண்டிகாரில் 3 பேருக்கும்,
காஷ்மீரில் 3 பேருக்கும்,
புதுச்சேரியில் 2 பேருக்கும்
இமாச்சல பிரதேசத்தில் ஒருவருக்கும்,
லடாக்கில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 876 பேரில் இதுவரை 381 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 465 பேரில் இதுவரை 57 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.