

புதுடெல்லி,
கடந்த ஏப்ரல் மாதம் ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. ஆனால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தனது கணிப்பை குறைத்துள்ளது.
அதன்படி, இந்திய பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலையால் பொருளாதார மீட்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அதுவே வளர்ச்சி குறைய காரணம் என்று தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மீதியுள்ள 2 காலாண்டுகளில் பொருளாதாரம் வலிமையாக மீண்டெழும் என்றும் கூறியுள்ளது.