டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.64 லட்சம் கோடி.. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?

கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்கு பின்னர் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது.
டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.64 லட்சம் கோடி.. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-18-ம் நிதியாண்டில் மாதம் ஒன்றிற்கு சராசரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் இருந்தது.

எனினும், கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்கு பின்னர் விரைவாக வசூல் அதிகரித்து, 2022-23-ம் நிதியாண்டில் சராசரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.

கடந்த மாதம் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆனது. இது முந்தைய ஆண்டின் நவம்பர் மாத வசூலை விட 15 சதவீதம் அதிகம்.

இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் டிசம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 882 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் டிசம்பர் மாத வருவாயை விட 10.3 சதவீதம் அதிகம் ஆகும்.

அதிகபட்சமாக மராட்டிய மாநிலம் ரூ.26,814 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.9,888 கோடி வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் ரூ.8,324 கோடி வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com