இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி அசாமில்தான் உள்ளது: ராகுல் காந்தி தாக்கு

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூரின் தவுபாலில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை 67 நாள்களில் 110 மாவட்டங்கள் வழியாக 6,700 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்க உள்ளது
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி அசாமில்தான் உள்ளது: ராகுல் காந்தி தாக்கு
Published on

கவுகாத்தி,

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார். யாத்திரையின் 5-வது நாளான இன்று நாகாலாந்தின் துலியில் இருந்து அசாமின் ஜோர்ஹாட் வரை நடைபயணம் தொடங்கியது. அசாமில் உள்ள சிவசாகரில் ராகுல் காந்தியின் யாத்திரை நுழைந்தது.

அப்போது அங்குள்ள மக்களிடையே பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:- "பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் அநீதி செய்து வருகின்றன. மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.பிரதமர் மோடி இன்று வரை அந்த மாநிலத்துக்குச் செல்லவில்லை இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி அசாமில் தான் நடக்கிறது. நாகாலாந்தில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அசாமிலும் அதேபேல் வரவேற்பை பெறுவோம் என நம்புகிறேன். ராகுல் காந்தி எப்போது வருவார் என மக்கள் காத்திருக்கிறார்கள்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம். எங்கள் கட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நம்புகிறது.  பாஜகவினர் தங்களை, சங்கராச்சாரியார்களை விட அதிக அறிவுடையவர்களாக கருதுகின்றனர். அந்தளவுக்கு பாஜகவினருக்கு ஈகோ உள்ளது" என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com