அந்நிய நேரடி முதலீடு விதிகளில் இந்தியா திருத்தம்; பாரபட்சமான நடவடிக்கை என சீனா விமர்சனம்

அந்நிய நேரடி முதலீடு விதிகளில் இந்தியா திருத்தம் மேற்கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு விதிகளில் இந்தியா திருத்தம்; பாரபட்சமான நடவடிக்கை என சீனா விமர்சனம்
Published on

பெய்ஜிங்,

கொரோனா தொற்று பரவலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இந்திய நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு விற்பனையில் சரிவைச் சந்தித்து வரும் நிறுவனங்களை, சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாக ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான விதிமுறையை கடுமையாக்கின.

இந்த நிலையில், இந்தியாவும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் முன் அனுமதி கட்டாயம் என்ற வகையில் திருத்தம் செய்தது. இந்தியாவின் எல்லையோர நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அல்லது இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனர் ஏதேனும் எல்லையோர நாட்டு குடிமகனாக இருந்தாலோ அல்லது இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனர் ஏதேனும் எல்லையோர நாட்டில் இருப்பவராக இருந்தாலோ, அரசிடம் முதலில் முறையிட வேண்டும் என்று விதியில் இந்தியா நேற்று திருத்தம் செய்தது.

இந்த நிலையில், இந்தியாவின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீனா கூறும் போது, உலக வர்த்தக மையத்தின் பாகுபாடில்லாத சுதந்திர மற்றும் நியாய வர்ததக விதிமுறைகளை மீறுவதாக இந்தியாவின் நடவடிக்கை உள்ளது. உடனே இந்த பாரபட்சமான போக்கை இந்தியா கைவிட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com