கொரோனா பாதிப்பு: அரசால் அறிவிக்கப்பட்டதை விட இத்தனை மடங்கு அதிக உயிரிழப்பா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அதிக எண்ணிக்கையில் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்ததாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வந்தன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கொடிய வைரசான கொரோனா, முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் கொரோனாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். அதன்படி இந்த கொடிய நோய்க்கு 4,81,000 பேர் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ அரசு தரவுகள் கூறுகின்றன. ஆனால், இந்திய அரசு வெளியிட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்ததாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.

இந்தியாவில் 2020-ம் ஆண்டு கொரோனாவால் கூடுதலாக 11.9 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், இது அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 8 மடங்கு அதிகம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் ஏற்கக்கூடியது இல்லை எனவும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆய்வில் பல குளறுபடிகள் உள்ளன. எனவேதான் ஆய்வாளர்கள் தவறான முடிவுக்கு வந்துள்ளனர். இந்தியாவின் சிவில் பதிவேடு அமைப்பில் 99 சதவீத உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன.

இந்தியாவில் 2019-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2020-ல் 4.74 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே 11.99 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது" என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com