இந்தியாவின் எண்ணெய் வித்து புண்ணாக்கு ஏற்றுமதி 36 சதவீதம் சரிவு

கடந்த ஆகஸ்டில் 1.76 லட்சம் டன் எண்ணெய் வித்து புண்ணாக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் எண்ணெய் வித்து புண்ணாக்கு ஏற்றுமதி 36 சதவீதம் சரிவு
Published on: 

புதுடெல்லி,

சர்வதேச விலை அழுத்தம் காரணமாக ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவின் எண்ணெய் வித்து புண்ணாக்கு ஏற்றுமதி 36 சத வீதம் சரிந்துள்ளது.

புண்ணாக்கு ஏற்றுமதி சரிவு

சர்வதேச சந்தையில் நிலவும் விலை அழுத்தம் காரணமாக இந்தியாவின் எண்ணெய் வித்து புண்ணாக்கு ஏற்றுமதி ஆகஸ்டு மாதத்தில் 36 சதவீதம் சரிந்துள்ளது. இந்திய எண்ணெய் கரைப்பான் பிரித்தெடுப்போர் சங்கத்தின் தரவுகளின் படி, கடந்த ஆகஸ்டில் 1.76 லட்சம் டன் எண்ணெய் வித்து புண்ணாக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 2.76 லட்சம் டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 12.82 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 17.93 லட்சம் டன்னாக இருந்தது.

மலிவுவிலை சந்தை

இதுகுறித்து சங்கத்தின் நிர்வாக இயக்குனர் பி.வி. மேத்தா கூறுகையில், சர்வதேச சந்தையில் இந்திய சோயாபீன் புண் ணாக்கு டன் ஒன்றுக்கு 622 டாலர் என்ற அளவில் வர்த்தகமான நிலையில், உலகளாவிய அளவுகோல் 445 டாலராக இருந்தது. அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகளின் மலி வான வினியோகம் சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

உள்நாட்டுத் தேவை, செங்கடல் கப்பல் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் கடல்சார் சரக்கு கட்டண உயர்வு ஆகியவை ஏற்றுமதி யைப் பாதித்துள்ளன. சோயாபீன் புண்ணாக்கு ஏற்றுமதி 73 சதவீதம் சரிந்துள்ள நிலையில், ரேப்சீட் புண்ணாக்கு ஏற்றுமதி ஓரளவு கைகொடுத்துள்ளது.

ஆசிய நாடுகளுக்கு அதிக ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து சீனா, வங்காளதேசம். தென் கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் முக்கிய இறக்குமதியாளர் களாக உள்ளன. சீனா 4.01 லட்சம் டன்னும், வங்காளதேசம் 2.17 லட்சம் டன்னும், தென் கொரியா 1.53 லட்சம் டன்னும், வியட்நாம் 1.23 லட்சம் டன்னும் இறக்குமதி செய்துள்ளன. சோபா அமைப்பின் கணிப்பின்படி காரீப் சோயாபீன் பயிர் 108 லட்சம் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பயிர் உற்பத்தி குறைவாக இருக்கலாம் என்ற கருத்தால் உள்நாட்டு விலை உயர்ந்துள்ளது.

X