

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள காலமுறை தொழிலாளர் படை ஆய்வின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் 4.9 சதவீதமாகச் சற்று குறைந்துள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5 சதவீதமாக இருந்தது.
கிராமப்புறங்களில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு மற்றும் பணிபுரியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இந்த முன்னேற்றத்திற்குக் காரணமாகும். 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான இந்த வேலையின்மை விகிதம், கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவான 5.2 சதவீதத்தை விட 0.3 சதவீதம் குறைவாகும்.
நகர்ப்புற வேலையின்மை விகிதம் செப்டம்பரில் 6.9 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோப ரில் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. கிராமப்புற வேலையின்மை விகிதம் 4.2 சதவீதமாக மாற்றமின்றி நீடிக்கிறது. பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் செப்டம்பரில் 34.6 சதவீத மாக இருந்த நிலையில், அக்டோபரில் 35 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கிராமப்புறங்களில் இது 39.5 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 25.9 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டுமொத்த தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 55.7 சதவீதமாகவும், பணிபுரியும் மக்களின் விகி தம் 53 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 5 சதவீத மாகக் குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் இது 8.7 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 3.8 சதவீ தமாகவும் உள்ளது. இந்த ஆய்வானது மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரத்து 475 பேரிடம் நடத் தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.