ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடல்: பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா..? - மத்திய அரசு விளக்கம்

கச்சா எண்ணெய் விலை உயர்வால் வணிக கியாஸ், விமான எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது.
ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடல்: பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா..? - மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் அதிகரித்ததன் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல் எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணை உலக கவனத்தை ஈர்த்தது. இந்த குறுகிய நீரிணை வழியாக உலகின் கடல் மார்க்க கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இந்தியாவுக்கு 80 சதவீதம் அளவிலான கச்சா எண்ணெய்யும், உலகளவில் 20 சதவீதம் கச்சா எண்ணெய்யும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ஈரானின் அணு திட்டங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதனால் சவுதி அரேபியா, ஈராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்து, கப்பல் போக்குவரத்து செலவு, காப்பீட்டு கட்டணம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிக்கும். உலகளாவிய சப்ளை செயின் பாதிப்பால் தொழிற்துறை உற்பத்தி. விமான போக்குவரத்து, மின்சாரம் உற்பத்தி மற்றும் பொருட்கள் கடத்தல் செலவுகள் உயர்ந்து எரிசக்தி நெருக்கடி உருவானது.

இந்தியாவில் இது நேரடியாக இதுவரை பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும் வணிக கியாஸ், விமான எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் நாட்டில் விலைவாசி உயர்ந்தது. மேலும் இந்தியாவுக்கு அரபு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்யும் குறைந்தது.

இதன் எதிரொலியாக குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட சுத்திகரிப்பு வளாகத்தில், ஒரு குறிப்பிட்ட பிரிவை தற்காலிகமாக மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் வளாகத்தில் உள்ள இந்த குறிப்பிட்ட பிரிவின் திறன் நாளொன்றுக்கு 6 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாய்கள் ஆகும். இந்த பிரிவுதான் இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆண்டுக்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யப்படும் வழக்கமான பராமரிப்புப் பணி காரணமாக சுத்திகரிப்பு ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தின் இரண்டாவது பாதியில் இந்தப் பணிகள் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிய 4 வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச்செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், "ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் மூடப்ப டுவதால் நாட்டில் பெட்ரோல், டீசல் அல்லது கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்க னவே தேவையான அளவு எரிபொருளைக் கையிருப்பில் வைத்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இதே வளாகத்தில் தனியாக மற்றொரு சுத்திகரிப்பு நிலையம் (7,04,000 bpd திறன் கொண்டது) உள்ளது. அது வழக்கம் போல் இயங்கும் என்பதால் ஏற்றுமதி பாதிக்கப்படாது" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com