இந்தியாவின் பணக்கார முதல் அமைச்சர்: முதலிடத்தில் டிகே சிவக்குமார்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா 55 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார்.
டிகே சிவக்குமார்
Published on

கர்நாடக முதல் மந்திரியாக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவகுமார் பதவியேற்றுள்ளார். இந்தியாவின் பணக்கார முதல் அமைச்சர் பட்டியலில் டிகே சிவகுமார் முதலிடம் பிடித்துள்ளார்.

தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் 1,413 கோடி சொத்துக்கள் இருப்பதாக டிகே சிவக்குமார் கூறியிருந்தார். இந்தப்பட்டியலில் இதுநாள் வரை முதலிடத்தில் இருந்த சந்திரபாபு நாயுடு, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு 931 கோடி ஆகும். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் விஜய் 648 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா 55 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார். இந்தியாவின் டாப்-3 பணக்கார முதலமைச்சர்களாக டி.கே. சிவக்குமார் (கர்நாடகா), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) மற்றும் விஜய் (தமிழ்நாடு) ஆகிய தென்னிந்திய தலைவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com