அரியானா தேர்தல்: சுயேச்சையாக களமிறங்கும் இந்தியாவின் கோடீஸ்வர பெண்

அரியானாவில் உள்ள ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட சாவித்ரி ஜிண்டால் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அரியானா தேர்தல்: சுயேச்சையாக களமிறங்கும் இந்தியாவின் கோடீஸ்வர பெண்
Published on

சண்டிகர்,

நாட்டின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். ஒ.பி.ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், ஹரியானா சட்டப்பேரவைக்கு வரும் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஹிசார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் சுயேச்சையாக களம் இறங்க சாவித்ரி ஜிண்டால் முடிவு செய்தார். இதன்படி, ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட சாவித்ரி ஜிண்டால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அரியானாவின் மந்திரியும் ஹிசார் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கமல் குப்தாவை எதிர்த்துதான் சாவித்ரி ஜிண்டால், ஹிசார் தொகுதியில் போட்டியிடுகிறார்.சாவித்ரி ஜிண்டால், ஏற்கெனவே ஹிசார் தொகுதியில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் 2005, 2009 ஆம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com