உத்தர பிரதேசம்: சமாஜ்வாடி கட்சியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்..!

46 வயதான தர்மேந்திர பிரதாப் சிங் மிக உயரமான மனிதராக கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.
உத்தர பிரதேசம்: சமாஜ்வாடி கட்சியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்..!
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி முதல் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலம் என்பதால் உத்தர பிரதேச தேர்தல் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசுக்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணி கடும் சவால் அளிக்கும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியும் கோதாவில் உள்ளது. இதானால், அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் கட்சி விட்டு கட்சி மாறும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே பாஜகவில் இருந்து முக்கிய தலைகள் சமாஜ்வாடி கட்சி பக்கம் கரை சேர்ந்த நிலையில் இந்தியாவின் மிக உயரமான மனிதரும் சமாஜ்வாடியில் இணைந்துள்ளார். 8 அடி 2 அங்குலம் கொண்ட நாட்டின் மிக உயரமான மனிதரான தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் சேர்ந்துள்ளார். 46 வயதான தர்மேந்திர பிரதாப் சிங் மிக உயரமான மனிதராக கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள நர்ஹர்பூர் காசியாஹி கிராமத்தை சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் நண்பர் ஒருவருக்காக பிரசாரம் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com