எல்லை மேலாண்மை ஒப்பந்தங்களை மீறியதால் சீனாவுடனான உறவு அசாதாரணமாக உள்ளது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

எல்லை மேலாண்மை ஒப்பந்தங்களை மீறியதால் சீனாவுடனான உறவு அசாதாரணமாக உள்ளது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
எல்லை மேலாண்மை ஒப்பந்தங்களை மீறியதால் சீனாவுடனான உறவு அசாதாரணமாக உள்ளது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
Published on

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கரீபியன் தீவு நாடான டெமானிக்கன் குடியரசு நாட்டுக்கு முன்தினம் சென்றார். அங்கு தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள தூதரக பள்ளியில் அவர் உரையாற்றினார். அப்போது பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் உலகின் பிறநாடுகளுடனான இந்தியாவின் உறவு குறித்து எடுத்துரைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிராந்திய நாடுகளுடனான தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பில் இந்தியா வியத்தகு விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. இருப்பினும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் இதற்கு விதிவிலக்காக உள்ளது. அதேபோல் எல்லை மேலாண்மை தொடர்பான ஒப்பந்தங்களை சீனா மீறியதன் விளைவாக அந்த நாட்டுடனான உறவு அசாதரணமாக உள்ளது.

அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, ரஷியாவோ அல்லது ஜப்பானோ எதுவாக இருந்தாலும், இந்தியாவுடனான அதன் உறவுகள் அனைத்தும் தனித்தன்மையை தேடாமல் முன்னேறுவதை உறுதி செய்ய முயற்சிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com