மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

புதுடெல்லி,

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது

இதனை தனது டுவிட்டரில் அமித் ஷா இந்தியில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளைப் அறிந்தவுடன், நான் சோதனை செய்து கொண்ட போது அதில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைபடுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com