இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 131 கோடியை தாண்டியது..!

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 131 கோடியை தாண்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தி முடிக்க இலக்கு எதுவும் இந்தியாவில் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், வருகிற டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பொருட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி மொத்தம் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பில் இருந்தும் இந்தியாவுக்கு பாராட்டு கிடைத்தது.

இந்த நிலையில், இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 131 கோடியைக் கடந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கூறுகையில், நாட்டில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி 67,11,113 பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று மாலை 7 மணி நிலவரப்படி 131,09,90,768 கோடியை கடந்தது.

இதுவரை செலுத்தப்பட்ட முதல் தவணை தடுப்பூசிகள் : 80,94,75,337

இதுவரை செலுத்தப்பட்ட இரண்டாவது தவணை தடுப்பூசிகள்: 50,15,15,431

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com