

மும்பை,
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்துள்ளதால், இன்று 62,000 ஐ தாண்டி புதிய உச்சம் தொட்டது. தற்போது சென்செக்ஸ் 62,156 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் புதிய உச்சத்தை தொட்டது. இன்று 127 புள்ளிகள் உயர்ந்து 18,604 ல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
சென்செக்ஸ் 390 புள்ளிகளும், நிஃப்டி 127 புள்ளிகளும் உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.