

அமராவதி,
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட அதிநவீன மீட்பு கப்பலான 'ஐ.என்.எஸ். நிஸ்தர்' இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், பாதுகாப்புத்துறை இணை மந்திரி சஞ்சய் சேத், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்று 'ஐ.என்.எஸ். நிஸ்தர்' கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
சுமார் 2 ஆயிரத்து 396 கேடியில், 80 சதவீத உள்நாட்டு தெழில்நுட்பத்துடன், கடற்படை பயன்பாட்டுக்காக ஆழ்கடல் மீட்பு கப்பலை இந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம் உருவாக்கியது. மொத்தம் 10 ஆயிரத்து 500 டன் எடையுள்ள 'ஐ.என்.எஸ். நிஸ்தர்' கப்பலில் உள்ள உபகரணங்கள் மூலம், கடலில் 300 மீட்டர் ஆழம் வரை சென்று மீட்பு பணிகளில் ஈடுபட முடியும். இதில் உள்ள ஆர்.ஒ.வி. நீர்மூழ்கிகள் மூலம் கடலில் 1,000 மீட்டர் ஆழத்திலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.