உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அபியாஸ்' ஏவுகணை 4 முறை வெற்றிகரமாக சோதனை - டி.ஆர்.டி.ஓ. தகவல்

‘அபியாஸ்’ ஏவுகணை எதிரிகளின் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அபியாஸ்' ஏவுகணை 4 முறை வெற்றிகரமாக சோதனை - டி.ஆர்.டி.ஓ. தகவல்
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் அதிவேக வான் இலக்கு ஏவுகணை 'அபியாஸ்', கடந்த ஜனவரி 30-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை 4 முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) தெரிவித்துள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அபியாஸ்' ஏவுகணை எதிரிகளின் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையின் சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com