ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம்: நடுவானில் குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி

விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது.
ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம்: நடுவானில் குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி
Published on

ஸ்ரீநகர்,

தலைநகர் டெல்லியில் புழுதிப் புயல் வீசிய நிலையில் பல இடங்களில் கனமழை பெய்தது.டெல்லி கீதா காலனி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.காற்றுடன் பெய்த கனமழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், 227 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியது.அந்தரத்தில் விமானம் குலுங்கியதால் பயணிகள் அலறினர்.விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில் அவசரமாக தரையிறங்க பைலட் அனுமதி கேட்ட நிலையில், ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக விமானம் தரையிறங்கியது. முன்பகுதி சேதமடைந்த விமானம் பத்திரமாக ஸ்ரீநகரை அடைந்த நிலையில் பயணிகள் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com