

மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பைக்கு இன்டிகோ விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
மும்பையில் தரையிறங்கும் சமயத்தில் விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான ஊழியர்கள் அந்த பயணியை எச்சரித்து, இருக்கையில் அமர வைத்தனர்.
அதனை தொடர்ந்து விமானம் தரையிறங்கியதும் சம்பந்தப்பட்ட அந்த பயணி மீது இன்டிகோ விமான நிறுவனம் போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேற்கூறிய தகவல்கள் இன்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.