மார்ச் மாத காலாண்டில் ரூ. 2 ஆயிரத்து 536 கோடி நஷ்டத்தை சந்தித்த இண்டிகோ

இண்டிகோ விமான நிறுவனத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மார்ச் மாத காலாண்டில் ரூ. 2 ஆயிரத்து 536 கோடி நஷ்டத்தை சந்தித்த இண்டிகோ
Published on

டெல்லி,

இந்தியாவில் மிகப்பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ செயல்பட்டு வருகிறது. உள்நாடு, வெளிநாடுகளுக்கு இண்டிகோ விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இண்டிகோ விமான நிறுவனத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ரூ. 2 ஆயிரத்து 536 கோடி நஷ்டம்

இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையிலான காலாண்டில் ரூ. 2 ஆயிரத்து 536 கோடி நஷ்டம் அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் இண்டிகோ விமான நிறுவனம் ரூ. 3 ஆயிரத்து 67 கோடி லாபத்தை எட்டியது. ஆனால், நடப்பு ஆண்டில் இண்டிகோ நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் விமான போக்குவரத்து பாதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் இண்டிகோ விமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com