

புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 109 வது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லி சக்தி ஸ்தலத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிறந்தவர். மூன்றாவது பிரதமராக 1966 முதல் 1977 வரையிலும், மீண்டும் 1980 முதல் அக்டோபர் 31, 1984-ல்படுகொலை செய்யப்படும் வரையிலும் பிரதமர் பதவியை வகித்தவர் இந்திரா.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். இந்திரா காந்திக்குப் பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை ஏற்றார். மொத்தம் 15 ஆண்டு 350 நாட்கள் பிரதமர் பொறுப்பு வகித்து, அவரது தந்தை நேருவுக்குப் பிறகு அதிக காலம் பிரதமர் பதவியை வகித்த 2-வது பிரதமர் என்ற பெருமைக்குரியவர் இந்திரா. தற்போது பிரதமர் மோடி அவரது சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.