பைகுல்லா சிறையில் மோதல்: இந்திராணி முகர்ஜிக்கு முக்கிய பங்கு என சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

பைகுல்லா சிறையில் ஏற்பட்ட மோதலில் இந்திராணி முகர்ஜிக்கு முக்கிய பங்கு என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பைகுல்லா சிறையில் மோதல்: இந்திராணி முகர்ஜிக்கு முக்கிய பங்கு என சிறைத்துறை அதிகாரிகள் தகவல்
Published on

மும்பை,

ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பைகுல்லா சிறைச்சாலையில் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ளார். பைகுல்லா மகளிர் சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை பெண் கைதி ஒருவர் பலியானார். இதையடுத்து சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே வன்முறை வெடித்தது.

சிறை கலவரத்தில் பெண் கைதிகள் கட்டிடத்தின் மேற்கூரைகளில் ஏறி நின்று போராட்டம் செய்தனர். இதில் இந்திராணி முகர்ஜியும் அடங்குவார். பெண் கைதிகள் போராட்டத்தை இந்திராணி முகர்ஜி தூண்டியதாக சிறை அதிகாரிகள் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முயற்சித்தால், தங்கள் குழந்தைகளை கேடயமாக வைத்துக்கொள்ளுமாறு சிறைக்கைதிகளிடம் இந்திராணி முகர்ஜி கூறியதாக போலீஸ் குற்றம் சாட்டினர்.

திருடியதாக பெண் கைதி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போலீசார் அந்தப்பெண்ணை தாக்கியதில் அவர் உயிர் இழந்தார். இதையடுத்து சிறையில் கலவரம் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. பெண் கைதியை தாக்கிய குற்றச்சாட்டில் ஜெயிலர் உள்ளிட்ட ஐந்து காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

யார் இந்த இந்திராணி முகர்ஜி?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.

பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் 2வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகிய 3 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com